Thursday, June 30, 2011

பாலியல்கவிதை

1.அய்யோ என்று கத்தினாள் அவள்
ஏன் இப்படி கத்துகிறாய்
என்றேன் நான்
அய்யோ என்று
பிறகு சின்ன எழுத்தில் கிசுகிசுத்தாள்
வலிக்குது என்றவுடன் திடுக்கிட்டு தடுத்து ...
'இது பாலியல் கவிதையாக
இருந்தால் உடனே நிறுத்திவிடு
ரிஷ்ய சிருங்கர்கள்உலவும் இடம்.'.என்றேன்
அவள் முறைத்து
'நீ என்கால் மீது நிற்கிறாய்!' என்றாள்

2.சனிக் கிழமை சனிக் கிழமை
உளுந்தங்களி உருட்டித் தருவாள் ஆச்சி
வழிய வழிய
நல்லெண்ணெய் தடவி ...
மாமிசம் தின்னா ஜாதிக்கு
கடவுள் கொடுத்த மாமிசம் என்பாள்
ஆச்சி போய்
ஆண்டுகள் ஆயிற்று
அவளோடு போயிற்று
அவள் அறிந்தவைகளும்..
உருட்டிக் கொடுத்த
உளுந்தங்களியின் வாசனை மட்டும்
மூக்கிலேயே இருந்தது ..
முந்தாநாள்
அவள் முலை நுகர்ந்தபோது
எழுந்துவந்தது....


3.கல்லிடைக் குறிச்சி
பச்சை அப்பளம்
சாப்பிட்டிருக்கிறீர்களா?
தின்னும்போது
அப்படித்தான் இருக்கிறது
அவள் உதடுகள் ...

4.நாரத்தை ஊறுகாய் ''
என்றேன் அவளிடம்
''வாசனையும் சுவையும் ''

புரியாமல் எதுவென்றாள் முதலில்..
பிறகு புரிந்து
'' ச்ச்ச்ச்சீய்ய்ய்ய்..............''

5 comments:

யோகி said...

இணை விழைச்சின் போதான அந்தரங்க திளைப்புகள் எல்லாமே அலாதியான அனுபவங்கள் தான். சரி தானே போகன்?

அப்பாதுரை said...

பிரமிக்க வைத்தது இரண்டு.
சிரிக்க வைத்தது நான்கு. (விழுந்து விழுந்து).
கிளப்பி விட்டது மூன்று (ஆர்வத்தை).

" நரகமனிதன் " said...

//நாரத்தை ஊறுகாய் ''
என்றேன் அவளிடம்
''வாசனையும் சுவையும் ''///

ha..ha..ha....
Super thala...

D.R.Ashok said...

:)

Srikandarajah கங்கைமகன் said...

அருமை!

LinkWithin

Related Posts with Thumbnails