யாரும் வாசிக்கவே இல்லை
என்றால் கூட
விழி எரித்து
சுடும் கவிதைகள்
எழுதிக் கொண்டேதானிருக்கிறேன்
யாரும் கேட்கவேயில்லை
எனினும் கூட
மனம் மறுகி மறுகிப்
பேசிக் கொண்டேதான் இருக்கிறேன்
கடிந்து மறுத்தால் கூட
காட்டருவி போல்
காதலைக் கொட்டிக் கொண்டேதான் இருக்கிறேன்
என்ன செய்வது
இடிந்து இடிந்து விழுந்தாலும்
இறுதிவரை
இந்தச் சுவற்றை
என்னைச் சுற்றி
எழுப்பிக் கொண்டேதான்
இருக்கவேண்டி இருக்கிறது
உச்சிக் கிளையில்
காற்று
கலைக்க கலைக்க
தினமும்
கட்டிக் கொண்டேதானிருக்கிறது
குருவி
தனக்கான கூட்டை...
அதும் இதும் ஒண்ணா?
ReplyDeleteதினமும் எட்டிப் பார்த்தாலும் .... இன்று நான் எட்டிப் பார்ப்பதற்குள்
ReplyDeleteபுதியதாய் முளைத்து விட்டது இந்த கவிதை. :)
வாசிப்பதற்காக மட்டுமே கவிதைகள் உருவாவதில்லை
நேசத்திற்காக மட்டுமே இதயங்கள் வாழ்வதுமில்லை.
எல்லாம் அதனதன் போக்கில் ....
beautiful! பலமுறை படித்தேன்.
ReplyDelete//வாசிப்பதற்காக மட்டுமே கவிதைகள் உருவாவதில்லை
நேசத்திற்காக மட்டுமே இதயங்கள் வாழ்வதுமில்லை.
எல்லாம் அதனதன் போக்கில் ....//
superb!