Thursday, February 24, 2011

இடறல்

விவிலியம் கூறுவது போல 
வெட்டிப் போட்டுவிட்டாலென்ன 
இதை 
என்று சிலநேரம் தோன்றுகிறது 
வளையில் சுருண்டு
மௌனித்திருக்க வேண்டிய 
இடங்களில் 
நேரங்களில் எல்லாம் 
சட்டென்று 
அசந்தர்ப்பமாய் 
கனத்து விரிந்து சீறுகிறது 
நட்பு நட்பு 
என்று கத்தினாலும் 
கற்பு கற்பு என்று 
கதறினாலும் 
காதில் ஏற்காது 
மயிர்ப் புற்றிலிருந்து 
படமெடுத்து ஆடுகிறது 
இரவுகளில் 
எலும்புவரை 
உயிரை 
இழுத்து உறிஞ்சி 
வெள்ளித் திரவமாய் 
கனவுகளில் பரவுகிறது  

படிக்கும்போது, 
பணி நடுவில், 
பிரார்த்தனையின் பாதியில், 
நோய்ப் படுக்கையில் கூட 
கடுக்கும் விஷமாய் 
கரைக்கும் அமிலமாய்.....
அறிவியல் 
அற நூல்கள் என்று 
அத்தனை போதனைக்கும் 
அடங்காது ஆடும் 
இந்தப் பாம்பை  

வெட்டிப் போட்டுவிட்டால்தான் என்ன?

11 comments:

  1. போடலாமே போடலாமே :)

    ReplyDelete
  2. மாயா ஜால கதைகளில் வருவது போல், சிதறிய துண்டங்களும் சீறி எழுந்தால்?

    ReplyDelete
  3. எந்த பக்கத்திலிருந்து பார்த்தாலும்,
    எத்தனை காலம் பார்த்தாலும் ...
    பாம்பின் ஆட்டம் நன்றாகவே தெரிகிறது.
    வெட்டிப்போட ஹெல்ப் தேவையா ???..
    அணுகவும் ----பாம்பு வெட்டும் சித்தர்
    (இரண்டு அர்த்தத்திலும் ....வெட்டிப்போடும் சித்தர்)

    ReplyDelete
  4. ஆட்டுபவனை விட்டு ஆடுபவனை வெட்டி போட நினைக்கிறீர்கள்!

    ஏன் வெட்டனும் என்பது என் கேள்வி!?,
    ஒரு பொருளின்/உறுப்பின் அதிகபட்ச, உயரிய பயன்பாட்டை உங்களால் கொடுக்க முடியுமானால் நீங்கள் படைப்பில்(இயற்கையி) சிறந்தவர் என அர்த்தமாகிறது!

    ReplyDelete
  5. எப்ப பார்த்தாலும் சிந்திச்சிகிட்டே இருக்கனும்னு மூளைக்கு மட்டும் வேலை கொடுக்குறிங்க!

    இது மட்டும் என்ன பண்ணுச்சு, அது அதன் வேலையை தான் செய்யுது, நீங்கள் தான் உலகின் மாயபிம்பத்தில் அதற்கு குற்றவாளி பட்டம் சாட்டுகிறீர்கள்!

    (வெட்டிப்போட்டதை ஒட்டி வைக்கும் சித்தர்)

    ReplyDelete
  6. http://josephinetalks.blogspot.com/2011_01_01_archive.html

    ReplyDelete
  7. ஆ..கா! அருமை.
    >>>வெட்டிப்போட்டதை ஒட்டி வைக்கும் சித்தர்

    ReplyDelete
  8. இதை அசிங்கமென்று கற்பித்தோரை வெட்டிப்போட்டால் எல்லாம் சுபமாகும்...

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails