Wednesday, February 2, 2011

காதலின் வெளிச்சம்

பிறர் முன்பு
ஒரு போதும்
எங்கள்
கண்கள் கலந்ததில்லை
பொதுவெளியில்
தனித்துப்
பேசிக் கொண்டதே இல்லை
புன்னகையின் கீற்றுகளைக் கூட
பிறர் பார்க்க
பகிர்ந்ததில்லை
குரல்களில் கூட
நெருக்கம்
கொண்டதேயில்லை
சந்திக்க நேரும்போதெல்லாம்
முகத்தில்
பிரகாசம் கூட
அனுமதிப்பதே இல்லை 

ஆனாலும்
எப்படியோ
எந்தக் கூட்டத்திலும்
எளிதாய்க் கண்டுகொள்கிறார்கள்
நாங்கள்
காதலில் இருப்பதை...

4 comments:

  1. ரகசியக்காதல். சூப்பர்.

    ReplyDelete
  2. இன்டெர்னெட் விடியோவில் வந்திருக்கும்..

    ReplyDelete
  3. மௌனமே காதலை சொல்லியதா!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails