Friday, July 15, 2011

இடரிடை வாழ்க்கை

மந்தையிலிருந்து 
ஆடு தவறிவிட்டது
மாலை விழும்போது
ஆடு
மலையின் தனிமையில் இருந்தது
நேரம் போகப் போக
அதற்கு பசித்தது
கொடுமையான குளிரில் நடுங்கியது

வேகமாக படியும்
இருட்டைக் கண்டு மிரண்டது 
புதர்களில் இருந்து கிளம்பிவரும்
வினோத ஒலிகளைக் கேட்டு
அஞ்சியது

அங்குமிங்கும் ஓடியபடி
மேய்ப்பர்களைத் தேடி ஓடியது
பரிதாபமாக கதறியது
பள்ளத்தாக்கின் கீழ்வளைவில் 
இரைக்கும் வயிற்றுடன்
நின்றிருந்த ஓநாய்க் கூட்டத்தின்
ஒளிரும் கண்களில் 
எரியும் பசியைக் கண்டு திடுக்கிட்டது 

சட்டென்று நின்று
ஒருகணம்
ராட்சதத் தட்டு போல் எழும்பும்
பெரிய
மஞ்சள் நிலவை வியந்தது

7 comments:

  1. கவிதையை அனுபவித்தேன், போகன். பிரமாதம்.

    ReplyDelete
  2. தலைப்பையும் சூட்சுமப் படுத்தியிருக்கலாமோ?

    ReplyDelete
  3. வாழ்வில் தேடலை மேற்கொண்டிருப்பவர்களின் நிலை தப்பி விட்ட ஆட்டின் நிலை தான்!

    ReplyDelete
  4. மிகவும் ரசித்தேன்!

    ReplyDelete
  5. கீழே புலி
    மேலே பாம்பு
    நாக்கில் விழும் தேன்துளி.
    இடரிடை வாழ்க்கை.

    ReplyDelete
  6. "ஆனை துரப்ப அரவு உறை ஆழ்குழி
    நாநவிர் பற்றுபு நாளும் ஒருவன் ஓர்
    தேனின் அழிதுளி நக்கும் திறத்தது
    மானுடன் இன்பம் மதித்தனை கொள்நீ"
    -------------சூளாமணிப் பாடல்.- தோலாமொழித் தேவர்.

    Read it yesterday. Eventhough I knew this all along, never had a chance to see this version. So I thought this can be one of the good places to document this.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails