Saturday, July 9, 2011

அளவினால் ஆனது அகிலம்

'எனக்கொரு யானை
வாங்கித் தர்றியா''
என்று கொஞ்சினாள் மகள்
''எனக்கு ரெண்டு''
என்றான் மகன் விரல் விரித்து.

சரியென்று சொல்லி
பள்ளியனுப்பி வைத்தேன்.
சிந்தனையுடன்
திரும்பி வந்து
பாதி படித்து
சலித்து
வைத்த
தத்துவப் புத்தகத்தை திறந்தேன்
மீண்டும் மூளை சலித்து விலகியது

சிறிய அலகால்
பெரிய உலகை
கொத்தித் தின்ன
விரும்பும் குருவிகள் நாம்
என்றொரு வரி தோன்றிற்று

மிகச் சிறிய அலகு..
மிகப் பெரிய உலகு......

4 comments:

  1. சிறியதையும் பெரியதையும் தத்துவத்தால் தொட்ட அழகுக் கவிதை போகன். சபாஷ்.

    ReplyDelete
  2. மிகச் சிறிய அலகு..
    மிகப் பெரிய உலகு......



    alakaana varikal
    valththukkal....




    can you come my said?

    ReplyDelete
  3. உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்;மற்றது
    தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

    ReplyDelete
  4. templateன் எளிமை பிடித்திருக்கிறது. அலகு வரிகளின் வலிமையும்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails