பில்லியனில் இருபக்கமும்
கால் விரித்து
ஆரோகணிக்கும் யுவதிகள்
இன்னமும் எலாஸ்டிக் நாடா
இடுப்பை அழுத்த
உள்பாவாடை அணிபவர்கள்
குத்த வைத்து
முழங்கால் பளிச்சிட
பத்து தேய்க்கும் வேலைக் காரிகள்
ஜன்னலைத் திறந்து
வைத்துக் கொண்டே உடை மாற்றுபவர்கள்
உதட்டின் மீது வளரும்
மெல்லிய பூனை மயிருக்கு
க்ரீம் தடவுகிரவர்கள்
ரோமப் பசுவெளி தெரிய
பஸ் கம்பியை பிடித்துக் கொண்டே
பிரயாணிக்கும்
அரைச் சோளி தேவதைகள்
அலுவல் கூட்டங்களில்
கால் மீது கால் போட்டு அமர்பவர்கள்
உள்ளுடை வரை தெரிய
இறுக்கமாய்
சுரிதார் அணிபவர்கள்
கால்பந்து மைதானத்தில்
உப்பு வியர்வை வீச்சத்துடன்
கடந்து போகிறவர்கள்
உதடுகளை அடிக்கடி
நாவால் வருடிக் கொள்கிறவர்கள்
மார்புச் செயின் எடுத்துக்
கடித்துக் கொள்கிறவர்கள்
ரோட்டோரக் கடையில்
நின்று
டீ குடிப்பவர்கள்
ஞாயிற்றுக் கிழமைகளில்
பேரம் பேசி
மாமிசம் வாங்குகிறவர்கள்
துண்டு போர்த்திய
இரவுடையுடன்
விலாசம் சொல்கிறவர்கள்
அது நனைய நனைய
தண்ணீர் பிடிக்கிறவர்கள்
மருந்துக் கடையில்
நாப்கின் வாங்குகிறவர்கள்
பெரிய தொங்கட்டான்
அசைய அசையப் பேசுகிறவர்கள்
ஹோட்டல் வாஷ்பேசினில்
குனிந்து முகம் கழுவுகிறவர்கள்
கார்ப்பரேசன் கழிவறை வெளியே
கொலுசுக் கால்களை தேய்த்துக் கழுவுகிறவர்கள்
துணிக் கடையில்
உள்ளாடை செக்சனில் நிற்பவர்கள்
பூப்புனித நீராட்டுவிழாவில்
புன்சிரிப்புடன் பன்னீர் தெளிப்பவர்கள்
முதல் இரவுக்கு
பெண்ணைத் தயார்ப் படுத்துகிறவர்கள்
குல்பியை உறிஞ்சிச் சாப்பிடுகிறவர்கள்
டிபன் பாக்ஸில்
மல்லிகைப் பூ கொண்டு வருகிறவர்கள்
ரேடியோவுடன் சேர்ந்து பாடுகிறவர்கள்
கடற்கரைகளில்
குதிரை மீது சவாரி ஏறுகிறவர்கள்
நாய்களுடன்
காலை நடை வருகிறவர்கள்
பால்கனியில் நின்றுகொண்டு
தலை கோதுகிறவர்கள்
கடக்கும் போது
ஓரக்கண்ணால் பார்க்கிறவர்கள்
பேசிக் கொண்டிருக்கும்போதே
ஜாக்கட்டைத் தளர்த்திக் கொள்கிறவர்கள் ..
நெடுநேரம் அலைபேசியில்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிறவர்கள்
குழந்தைகளை உதட்டில்
முத்தமிடுகிறவர்கள்....
முதிர் யுவனின்
கனவுகளில் நிறையும் பெண்கள்..
கால் விரித்து
ஆரோகணிக்கும் யுவதிகள்
இன்னமும் எலாஸ்டிக் நாடா
இடுப்பை அழுத்த
உள்பாவாடை அணிபவர்கள்
குத்த வைத்து
முழங்கால் பளிச்சிட
பத்து தேய்க்கும் வேலைக் காரிகள்
ஜன்னலைத் திறந்து
வைத்துக் கொண்டே உடை மாற்றுபவர்கள்
உதட்டின் மீது வளரும்
மெல்லிய பூனை மயிருக்கு
க்ரீம் தடவுகிரவர்கள்
ரோமப் பசுவெளி தெரிய
பஸ் கம்பியை பிடித்துக் கொண்டே
பிரயாணிக்கும்
அரைச் சோளி தேவதைகள்
அலுவல் கூட்டங்களில்
கால் மீது கால் போட்டு அமர்பவர்கள்
உள்ளுடை வரை தெரிய
இறுக்கமாய்
சுரிதார் அணிபவர்கள்
கால்பந்து மைதானத்தில்
உப்பு வியர்வை வீச்சத்துடன்
கடந்து போகிறவர்கள்
உதடுகளை அடிக்கடி
நாவால் வருடிக் கொள்கிறவர்கள்
மார்புச் செயின் எடுத்துக்
கடித்துக் கொள்கிறவர்கள்
ரோட்டோரக் கடையில்
நின்று
டீ குடிப்பவர்கள்
ஞாயிற்றுக் கிழமைகளில்
பேரம் பேசி
மாமிசம் வாங்குகிறவர்கள்
துண்டு போர்த்திய
இரவுடையுடன்
விலாசம் சொல்கிறவர்கள்
அது நனைய நனைய
தண்ணீர் பிடிக்கிறவர்கள்
மருந்துக் கடையில்
நாப்கின் வாங்குகிறவர்கள்
பெரிய தொங்கட்டான்
அசைய அசையப் பேசுகிறவர்கள்
ஹோட்டல் வாஷ்பேசினில்
குனிந்து முகம் கழுவுகிறவர்கள்
கார்ப்பரேசன் கழிவறை வெளியே
கொலுசுக் கால்களை தேய்த்துக் கழுவுகிறவர்கள்
துணிக் கடையில்
உள்ளாடை செக்சனில் நிற்பவர்கள்
பூப்புனித நீராட்டுவிழாவில்
புன்சிரிப்புடன் பன்னீர் தெளிப்பவர்கள்
முதல் இரவுக்கு
பெண்ணைத் தயார்ப் படுத்துகிறவர்கள்
குல்பியை உறிஞ்சிச் சாப்பிடுகிறவர்கள்
டிபன் பாக்ஸில்
மல்லிகைப் பூ கொண்டு வருகிறவர்கள்
ரேடியோவுடன் சேர்ந்து பாடுகிறவர்கள்
கடற்கரைகளில்
குதிரை மீது சவாரி ஏறுகிறவர்கள்
நாய்களுடன்
காலை நடை வருகிறவர்கள்
பால்கனியில் நின்றுகொண்டு
தலை கோதுகிறவர்கள்
கடக்கும் போது
ஓரக்கண்ணால் பார்க்கிறவர்கள்
பேசிக் கொண்டிருக்கும்போதே
ஜாக்கட்டைத் தளர்த்திக் கொள்கிறவர்கள் ..
நெடுநேரம் அலைபேசியில்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிறவர்கள்
குழந்தைகளை உதட்டில்
முத்தமிடுகிறவர்கள்....
முதிர் யுவனின்
கனவுகளில் நிறையும் பெண்கள்..
இதைப் படிக்கும் எவரும் அட்லீஸ்ட் இதில் ஒன்றையாவது கடந்து வந்திருக்கவேண்டும் போகன்! ஏ க்ளாஸ்!! :-)
ReplyDeleteநெடுநாளாகவே பதிலிட வேண்டும் என்று நினைத்து கொண்டுஇருக்கிறேன். அப்பட்டமான உண்மைகளுடன் காமம் சேர்த்து எழுதுபவர்களில் நீங்களே முதன்மை என்று நினைக்கிறேன். மென்மேலும் தங்களது கவிதைகளை சுவைக்க காத்திருக்கிறேன்.
ReplyDeleteநெஞ்சார்ந்த வாழ்த்துக்களுடன்
விஜய்
சீரற்ற வரிசையில்
ReplyDeleteசில காட்சிகளை
நினைவூட்டிச் செல்லும் வரிகள்.
beautiful! :)
ReplyDeleteபெண்ணின் கண்கள் எப்படி எல்லாம் அலைபாயும்! ம்ம்ம்ம்......சுவாரசியம்தான்!
அட இத்தனையான்னு படிச்சிகிட்டே வரும் போது கடைசியில் அந்த ஒரு வரி முதிர்கண்ணன்கள் என்ற அந்த வார்த்தையை படித்ததும் தான் இப்படி கோணம் இருக்கும் என்பதையே உணர்கிறேன்...
ReplyDeleteclass
ReplyDeleteஒருமாதிரியா காமம் கலந்து எழுதினா ஒடனே இதான் பின்னவீனத்துவம், இலக்கியம்ன்னு ஆரம்பிச்சிடறாங்க... உஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா...
ReplyDeleteபெண்கள் பற்றிய சித்திரங்களாக Montage shot களாக படம் பிடித்தால் Visual லாக பிரமாதமாக இருக்கும்!
ReplyDeleteசின்னச் சின்ன வக்கிரங்கள் என்று போகனைப் படித்து வந்தால் meenakshiயின் கமென்ட் தூக்கிவாரிப் போட்டது! பெண்களின் கண்ணோட்டம் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
ReplyDeleteஸ்டைலாய் விரல் நுனியில்
ReplyDeleteசிகரெட் பிடித்து "தம் " அடிப்பவர்கள்,
மார்பு பட்டன் விலக, செயின் வெளித்தெரிய
பைக்கில் ஆரோகணிக்கும் காளைகள்,
கோவணம் கட்டி, வரப்பொதுக்கும்
விவசாயி ,
வெள்ளை, நீலம், காக்கி என்று,
கம்பீரமாய் "uniform" போட்டவர்கள் ,
பெண்களை பார்த்து ஜொள்ளு விடாமல்
கோபம் கொள்பவர்கள்,
கண்களை மட்டும் பார்த்து பேசுவதாக
பாவனை செய்பவர்கள்,
white shirt, blue jeans அணிந்த
நவீன பைக்கர்கள்,
தொட்டுப் பேசியும்
அவ்வப்போது அணைத்தும்
ஆறுதல் தருபவர்கள்,
எத்தனை பேர் இருப்பினும்
தன்னை மட்டும் பார்ப்பவர்கள்......
காதலியோடு டீ அருந்தும்
விளம்பர காதலர்கள்,
குழந்தை மனைவியோடு
ஊருலா வரும் கணவர்கள்,
மனைவியின் தொழில் கைபோட்டு நடப்பவர்கள்.
பைக்கில் வேகமாய் செல்பவர்கள்
நீண்ட கால்கள் கொண்டவர்கள்
"அது" வும் ........
இப்படி ...இன்னும் என்னென்னவோ இருக்கிறது
பெண்களின் கண்களிலும்.
sample - எதிர்க்கவிதை for Meenakshi
-----------------------------------------
வெகுநாட்கள் நெட் இல்லாது இப்போதுதான் திரும்பினேன்,
உங்களின் கவிதைகளை வாசித்தேன்.
மீண்டும் வாசிப்பின்பம்.
//கண்களை மட்டும் பார்த்து பேசுவதாக பாவனை செய்பவர்கள்... ஹிஹி.. been there.
ReplyDeleteவரப்பொதுக்கும் விவசாயியில் போகனுக்கு இணையான விகாரம் Santhini :) பின்னிட்டீங்க போங்க!
தேங்க்ஸ் சாந்தினி. ரசித்தேன்! :)
ReplyDeleteNice one Santhini
ReplyDeleteVijay
Thanks. நாங்களும் ரசிப்போம்ல :))போகன் கோவிச்சுக்காம இருந்தா சரிதான்.
ReplyDelete