Friday, December 30, 2011

கன்னித் திரை

அவிழ்க்க 
அவிழ்க்க 
அவிழா புதிராய் 
அவள் 
இறுகிக் கொண்டே இருந்தாள்

கடைசி முடிச்சு 
என்று நான் 
முட்டியதும் 
கடைசி யல்ல 
என்றறிந்தபோது அயர்ந்து போனேன் 

காய்களை நகர்த்துகிறவன்
நானல்ல 
என்று எந்தக் கணம் உணர்ந்தேன்?
என்று தெரியவில்லை.

ஆனால் 
உணரும்போது 
முற்றிலுமாக 
நான் 
சிக்கிக் கொண்டிருந்தேன்.

கால் பாவ 
இடம் தராத புதை மணல்...
வழி திரும்பா 
அடர் வனம்..
கபால மாலை 
அணிந்த கொற்றவை..


மழை நாள் மதியத்தில் 
உறவு முடிந்ததும் 
ஆடை அணிந்து கொண்டிருந்தவளை 
அச்சத்துடன் பார்த்தேன் 
யார் இவள்?


அவள் 
என் பதற்றத்தைக் 
கண்ணாடியில் கவனித்துப் 
புன்னகைத்தாள் 

வெறும் கன்னித்திரை என நினைத்தாயோ 
என்னை ?
என்பது போல...

6 comments:

  1. ஆண்மை அம்புட்டுதேன்!
    அழகாச் சொன்னீங்கோ.

    ReplyDelete
  2. போகன்- டவுன் லச்சுமி திரை அரங்கில் ஒரு சீன/ கொரிய பிட் படம் பார்த்து இருக்கிறேன் (பெயர் ஞாபகம் இல்லை)
    அதில் இப்படிதான் இருபது நிமிடம் ஆடை அவிழ்த்தலே நடக்கும்.

    ReplyDelete
  3. :)

    Wish you a happy new year!

    ReplyDelete
  4. ஹா! அபாரமான கவிதை. இது மாதிரியான தரிசனங்கள் ப்ரகாஷின் கதைகளில் பார்த்திருக்கிறேன் போகன்.அற்புதம்.

    இதுதான் என்றெண்ணும் போது இதில்லை எனும் நிதர்சனம் தரும் திகைப்பு மொழியைக் கடந்தது.

    //ஆனால்
    உணரும்போது
    முற்றிலுமாக
    நான்
    சிக்கிக் கொண்டிருநதேன்.//

    என் கோப்பைகள் இந்த வரிகளோடேயே நிரம்பித் தளும்பியதாய் உண்ர்ந்தேன்.

    ReplyDelete
  5. பெண்மை என்றுமே அவிழ்க்க முடியாத புதிர் தான்!

    ReplyDelete
  6. பெண்மையை பேருச்சியில் வைப்பதும் அதன் அழகியலை நுட்பத்துடன் ரசிப்பதும் மிக இயல்பாக உங்களால் வெளிப்படுத்தப் படுகிறது.
    சில நிமிடங்களேனும் எங்களை - கர்வம் கொள்ள வைக்கிறீர்கள். Thanks.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails