மதுக் கோப்பையில்
மிதக்கிறது
ஒரு நிணத் துண்டு.
ஐந்தாங் கிளாஸ் தமிழ் டீச்சரின்
பருத்திப் புடவைக்குள்
விறைத்து நிற்கும்
இடது முலைப் பொட்டு
விவிலிய வகுப்பெடுத்த
இளம் துறவியின்
கீழுதடு
நண்பனின் அம்மா
பாத்திரம் கழுவுகையில்
அசையும் இடுப்புச் சதை
புடவை மாற்றுகையில் எல்லாம்
விரியும்
ராமேஸ்வரி அத்தையின்
பூனை மயிர் பூத்த தொப்புள்..
தடுக்கப் பட்ட பழம்
நிச்சயமாய் மறப்பதே இல்லை
அனுமதிக்கப் பட்ட யோனிகளில் கூட
அதன் சுவடு நகக் குறி போல பதிந்திருக்கிறது
தொழும் கைகளின் நடுவே கூட
இருக்கிறது ஆறாவது விரலாய்..
எல்லா விளையாட்டுகளின்
நடுவிலும் ஓடுகிறது
இன்னொரு இழையாய்
இலுப்பூர் பேருந்து நிலையத்தில்
நேற்று மாலை
எனக்குத் தடுக்கப் பட்ட கீழுதடைப் பார்த்துப்
பேசிக் கொண்டிருந்தேன்
கர்த்தருக்கு ஸ்தோத்திரங்கள் சொல்லி
விடைபெற்றவுடன்
பதற்றத்துடன் தேடிக் கண்டடைந்தேன்
மதுக் கோப்பையில் எப்போதும்
எனக்காகக்
கிடக்கும் நிணத் துண்டை ..
போகன், ஐ லவ் யூ!
ReplyDelete//அனுமதிக்கப் பட்ட யோனிகளில் கூட
அதன் சுவடு நகக் குறி போல பதிந்திருக்கிறது//இப்படி ஒன்றைச் சொல்லி விலக முடியாதபடி இருகிறது கவிதை!
நிணத் துண்டோடாயினும் வாழ்க!
romba naalachu ippadi ezhuthi class !!!
ReplyDeleteபடமும் பாடலும் பொருத்தமோ பொ.
ReplyDeleteஅரை perverted வரிகளை மீண்டும் ரசிக்கிறேன்.. :)
ஆமா... தவளைக்கதை எப்போ எழுதப் போறீங்க?
ReplyDeleteமனதின் இண்டு, இடுக்கு எதையும் விடுவதில்லை உங்கள் கவிதை!
ReplyDeleteபிரமாதம்!
ReplyDelete