கேட்போர் பற்றிக்
கவலையின்றி
நீ
சொற்களை
சரம் போல்
பெய்துகொண்டே இரு.
ஏதோ ஒரு
பலவீன தருணத்தில்
அவர்கள் செவிகளின்
மௌனப் பறை உடையும்.
கிடைத்த சிறிய
இடைவெளியில்
நுழைந்துவிடும்
போதை விஷம் தடவிய
நமது ஒற்றைச் சொல்.
மூளையெங்கும்
புற்றாய்
பல்கிப் பரவும்.
ஒரே இரவில்
அவர்கள்
ஆன்மா முழுதும்
நமது
சொற்களால் நிரம்பியிருக்கும்.
இனி சிரமமில்லை.
அவர்களை நாம்
அவர்களின் உள்ளிருந்தே
ஆளலாம்.
ஏனெனில்
சொற்களால் ஆனது
அவர்கள் உலகம்.
அற்புதமான அவதானிப்பு...
ReplyDeleteமிக அமைதியாய்ப் பேசும் கவிதை
"ஏனெனில்
சொற்களால் ஆனது
அவர்கள் உலகம். "
சொற்கள் சொற்களைக் கொண்டு உருவாக்கிய உலகில் சொற்களே சொற்களை ஆளுக்கின்றன
faculty என்ற படத்தின் கரு இதைபோன்றதே
ReplyDelete