மழைநீர் நிறைவது போல்
கொஞ்சம் கொஞ்சமாக
சத்தங்கள்
மூளையில்
நிரம்பிக் கொண்டிருப்பதைப்
பார்த்துப்
பதற்றம் கொள்கிறேன்
கவனம் கொள்ளாவிடில்
முன்பு போல்
அது கனம் கூடி
பிறர் மேல் வெடிக்கும் அபாயம்
உண்டென அறிந்து
தியானம் செய்தோ
கவிதை எழுதியோ
காட்டுக்குள் நுழைந்தோ
அனுமதியின்றி உள்ளே நிரம்பியதைக்
கவிழ்க்க முயற்சிக்கிறேன்
கவிழ்க்க கவிழ்க்க
புதிய சத்தங்கள்
பூரான்கள் போல்
ஆயிரம் கால்களுடன்
பெருகி வருவதை
அச்சத்துடன் அறிந்து நடுங்குகிறேன்
களிப்புடன்
என்னைச் சுற்றி விளையாடும் பிள்ளைகள்,
கவிதைப் புத்தகம்
படிக்கும் மனைவி,
கணினியில் கதைக்க வரும் தோழி
என்று எல்லார் உலகத்தையும்
நொடியில் சிதைத்தழிக்கும்
உதிரக் குறி கொண்ட
கத்தி ஒன்று
மெல்ல மெல்ல
என் மூளையில்
கூர் தீட்டப் படுவதை
இந்த முறையும்
என்னால் தடுக்கமுடியவில்லை தோழர்களே...
மன்னியுங்கள்...
குழி தோண்டி மண்ணுக்கு மேல் வரும் எண்ணத்தை சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்க>.
ReplyDeleteபடத்தைப் பாத்ததும் ஒரு kitchen product ஐடியா தோணிச்சு.
ReplyDeleteகணவன் மனைவி பக்கத்து வீட்டு மாமி என்று நமக்கு பிடிச்ச அல்லது பிடிக்காதவங்க முகத்தையே தலையா செஞ்சு அங்கங்கே கத்தி செருகி வைக்க வசதியா customized knife stand.
அப்பாத்துரை சார் ஏற்கனவே உங்க எழுத்தை பாசிஸ்ட் எழுத்துன்னு [என்னையும்தான்]சொல்றாங்க...இந்த கமெண்டைப் படிச்சா கன்பார்ம் பண்ணி லேபில் ஒட்டிடுவாங்க!))
ReplyDeleteஅதுக்காக தொழிலை விட்டுற முடியுமா சொல்லுங்க?
ReplyDelete