ஒரு சிறிய இலை
பழுத்துத்
தங்கமாகி
தரை மேல்
ஒரு மெல்லிசை சரிவது போல்
விழுவது போன்றே
விழ விரும்புகிறேன்
மென்மையாய் அரவமில்லாமல்...
ஆனால்
புயல் காற்றில்
பிடுங்கி எறியப் படும்
பெரு மரம் போலதான்
ஆகிறது எப்போதும்...
நான்
இன்னும் சத்தம் குறைவாக
சாகக் கற்றுக் கொள்ளவேண்டும்
என்று
நண்பர்கள் சொல்கிறார்கள்....
அடுத்தமுறை
சரியாகச் செய்கிறேன் என்கிறேன்
ஒவ்வொரு முறையும்..
கடைசி வரியில் கவிதையை ஒளித்து வைப்பதே வழக்கமாகி விட்டது உங்களுக்கு.
ReplyDelete