Monday, April 16, 2012

கொற்றவை

பேரணங்கின் ஆரம் சுழலுமிடம் 
என்ற துணிவோ 
உடல் என்பது வெறும் ஊன் 
என்ற தத்துவம் கொண்டவளோ 
தேநீரின் மீது மிதக்கும் பாலாடை போல 
பாசி மிதக்கும் 
அம்பலக் குளத்துறையில்

ஆயிரமாயிரம் பாதங்கள் அழுந்தித் தேய்ந்த 
கல் தரையில் நின்று 
அலட்சியமாய் 
ஆடை களைந்து கொண்டிருந்தாள் பெண் 
விரித்த சாளரத்தின் வழி 
புலர் பொழுதில் கிடைத்த முதல் காட்சி
காதலிக்காமல் 
கல்யாணம் செய்யாமல் 
காசு எறியாமல் 
காணக்கிடைத்த 
இலவசப் பெண் உடலைப் 
புறக்கணிக்க முடியாது 
நின்றேன் 
அடி வயிற்றுத் தசைகள் இறுக
ஒரு துப்பாக்கி உயர்த்தப் படுவது போல 
ஆண்குறி எழும்ப 


சீலை விலக்கி எறிந்து 
முலை மூடாடை கழற்றி 
முடிச்சிட்ட்ட பாவாடையைத் தளர்த்தி 
மேலேற்றி 
கரிய வாழை போல சரியும் 
கால்களை உயர்த்தி 
கீழாடை உதறும் போது 
கணுக்களில் தயங்கி நின்ற 
ஒற்றைக் கொலுசை மாத்திரம் கண்டேன் 

யாரோ பார்ப்பது போல உணர்ந்து 
சட்டென்று ஜன்னலை மூடினேன் 

துடிக்கும் இருதயத்தோடு 
திரும்பியபோது 
அறையில் இருந்த 
பழந் தெய்வத்தின் 
சினத்தின் செவ்வரி ஓடிய
சித்திரக் கண்கள் 
ஒரு கணம் 
அசைந்து மீண்டனவா?


எப்போதும் எச்சரிக்கையாய் இருங்கள் 
ஆடை மாற்றும் போது
பார்க்கும் கண்களைக் குறித்து..

பார்க்கும் கண்களைப் பார்க்கும் கண்கள் குறித்தும்..

4 comments:

  1. //கரிய வாழை போல
    சரியும் கால்களை //

    போகன்,

    என்னவொரு உவமை!

    போதை ஏறுது சாமி.

    ReplyDelete
  2. பார்த்தாலே துப்பாக்கியா? அட!
    'பார்க்கும் கண்களைப் பார்க்கும் கண்கள்' - நயத்தை ரசித்தேன்.
    welcome back!

    ReplyDelete
  3. Fantastic! மிகவும் ரசித்தேன்.
    //தேநீரின் மீது மிதக்கும் பாலாடை போல
    பாசி மிதக்கும்
    அம்பலக் குளத்துறையில்
    ஆயிரமாயிரம் பாதங்கள் அழுந்தித் தேய்ந்த
    கல் தரையில்//

    கவிதை எழுத ஆரம்பிக்கும்போதே வார்த்தைகள் உங்களை தேடி வந்து விழுமோ!

    படித்துறைல பெண்கள் குளிக்கறதுக்கு முன்னாடி ஆயத்தம் ஆறதையே அழகாய் கவிதை வரிகளில், கலக்கல்!
    முடித்திருக்கும் விதம் பிரமாதம். சைட் அடிக்கறதுக்கு எச்சரிக்கை வேறயா! :)

    கவிதைக்கான படமும் அழகு. எங்க ஊரு அங்காளம்மன் கோவில் சிலைக்கு கண்கள் இப்படியேதான் இருக்கும். 'கொற்றவை' தலைப்பையும், படத்தையும் பார்த்து அம்மன் மேல கவிதயோன்னு நெனச்சுட்டேன். :)

    ReplyDelete
  4. disturbing....love this bogan

    padam attagasam

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails