Monday, April 18, 2011

குறுந்தொகை

1.கொடியில்
ஒரு மலர் போல
ஆடிக் கொண்டிருந்தது
குத்துவிளக்கின்
கிளையில் சுடர் ...

அணியச் சுடும்
தணல் மலர்.



2.எட்டிப் பார்க்கும்போது
தவறி
குட்டையில் விழுந்துவிட்டது
என் முகம் ....
விழுந்த முகத்திற்குப்
பதிலாய்க்
கிடந்த நிலவை
எடுத்துப்
பொருத்திக் கொண்டேன் ..
இது திருட்டில்
சேராது தானே?




3.உதிரமுத்தை
உடைத்து
சுவைத்தேன்
உயிரின் நாற்றம்..


4.இந்தக் கதை
இந்த இதழுடன் முடிகிறது
என்றேன்
அடுத்த இதழில்
தொடர்கிறது
என்றாள் அவள்...


5.நட்பெனச்
சொல்லி
இருத்தினாய் நீ
காதல் என்று
கதைத்தார் சிலர்
உண்மை என்னவென்று
கேட்ட நண்பரிடம்
இன்னமும்
பெயர் வைக்காத
ஒரு வலி
என்றேன் நான்.








 

5 comments:

  1. நல்லா இருக்கு! இரண்டாவதை மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  2. எல்லா கவிதைகளையும் அருமை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
    குத்துவிளக்கின் கிளை
    திருடிய நிலவு
    அடுத்த இதழ்
    பெயரில்லா வலி
    என்னென்ன கற்பனை ! :)

    ReplyDelete
  3. மெருகேறிய வரிகள்.
    உயிரின் நாற்றம் out of place?

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails