Wednesday, October 5, 2011

சாலைத் தெரு


உருசுக் குட்டியின்
கூர் தீட்டிய முலைகளிடமிருந்து
விடைபெற்று
ல சா ரா
சாலைத் தெரு
ஆ மாதவனிடம் போனார்
அங்கிருந்து இருவரும்
நகுலனிடம் சென்றார்கள்
நகுலனும் அவர் நாயும்
ஒரே வீட்டில்
தனித்தனியாக இருந்தார்கள்
சுசீலா எங்கே இருக்கிறாள்
என்றதற்கு
''சுசீலாவும் செத்துக் கிடக்கிறாள்''என்றார் நகுலன்
ஜகன்மித்யை
என்று கசிந்தார் லா சா ரா
துரும்பைத் துரத்திப் போகும் துரும்பும்
என்றார் மாதவன்
நிணக் கச்சோடம்
நிணக் கச்சோடம் என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.
நகுலனின் நாய்
அவர்களை முறைத்துக் கொண்டிருந்தது
''அவனுக்கு இறைச்சி நாள் இன்று ''
என்றார் நகுலன்
''நேரம் போகப் போக
நாம் எல்லாரும்
அவனுக்கு இறைச்சிப் பொதிகளாய் மாறிக் கொண்டிருக்கிறோம் ''
என்றார் எச்சரிக்கையாக,
லா ச ரா கால்களை
இழுத்துக் கொண்டார்
ஒருக்கால் ..ஒரு கால்
என்று எழுதிக் கொண்டது அவர் மனம்
பிஜாய்ஸ் குப்பியைத் திறந்ததும்
பட்டு உத்தரியம் தொங்க
கம்பனும்
ஈசுவர மூலியுடன்
மீசை தளரா பாரதியும் வந்து சேர்ந்துகொண்டார்கள்
இரண்டாம் கோப்பைக்கு மேல்
ஜாய்சும் ஹென்றி ஜேம்சும் வில்லியம் பாக்னரும்....
ஹோமரும் ஷேக்ஸ்பியரும் .
.இன்னும் இன்னும் பலரும்


நான் போய்ச சேர்ந்த போது
மது தீர்ந்து போயிருந்தது
அவர்கள் போயிருந்தார்கள்

6 comments:

  1. உங்களது வாசிப்பின் ஆழத்தையும் உள்வாங்கி நினைவில் வைத்திருக்கும் ஆற்றலையும் காட்டுகிறது. Well done! வாழ்க!

    ReplyDelete
  2. நகுலன் இறந்து விட்டாரா?உங்கள் கவிதையைப் படித்ததும் இணையத்தில் தேடிப்பிடித்துத் தெரிந்துகொண்டேன்.
    அருமையான கற்பனை.

    ReplyDelete
  3. உங்கள் கற்பனை திறன் என்னை அதிசயிக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. Wish you a very Happy Diwali Bogan!

    ReplyDelete
  5. thank you meenakshi...same to you))

    ReplyDelete
  6. முத‌ல் முறை உங்க‌ள் த‌ள‌த்திற்கு வ‌ருகிறேன்..

    இத்த‌னை நாள் எப்ப‌டி விட்டேன்னு யோசிச்சுக்கொண்டிருக்கிறேன்..

    ஒரே வ‌ரியில் சொன்னால் அருமைங்க‌.. :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails